பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் ரூ.10 லட்சத்தில் மதி அங்காடி , கலெக்டர் ஆய்வு!

schedule
2025-05-06 | 10:20h
update
2025-05-06 | 10:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector inspects Madhi Angadi worth Rs. 10 lakhs at Siruvachur Madura Kaliamman Temple!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதி அங்காடியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டார்.

Advertisement

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் “மதி அங்காடி” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்தை தொடர்ந்து, சிறுவாச்சூர் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்திடும் பொருட்டு மதுரகாளியம்மன் கோவில் அருகில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் “மதி அங்காடி” கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பணியினை திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு தரமாகவும், விரைந்து முடித்து மகளிர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும், கடையை நிர்வாகிக்க உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு போதிய பயிற்சி வழங்கிட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 22:34:37
Privacy-Data & cookie usage: