மண், விதை பரிசோதனை ஆய்வகங்களில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு!

schedule
2026-06-11 | 16:35h
update
2026-06-11 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector inspects soil and seed testing laboratories!

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் விதை பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷரண்யா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய பயிர்களான மக்கச்சோளம், பருத்தி, நெல், வெங்காயம் மற்றும் இதர பயிர்களான பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்களில் விதை தரம் குறித்து விதை பரிசோதனை விதை பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளபடுகிறது. இதனை பார்வையிட்ட கலெக்டர், விதை மாதிரிகளின் பரிசோதனை குறித்த செயல்பாடுகள், உபகரணங்களின் தரம் மற்றும் அலுவலர்களின் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைத்திடவும் பகுப்பாய்வு முடிவுகளை உரிய காலத்தில் வழங்கிடவும் வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இளம் முன்னோடி விவசாயிகளின் மூலமாக வேளாண்மை தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தின் மண் மாதிரி, பாசன நீர் மாதிரி சேகரித்தல், பரிசோதனை ஆய்வக பேருந்தில் உள்ள உபகரணங்களின் செயல்பாடு , ஆண்டு இலக்கீடு நடமாடும் மண் பரிசோதனை வாகன முகாம் இலக்கீடு மற்றும் சாதனை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம், டிரைகோகிரம்மா கைலொனிஸ், என்.பி.வி ஆகியவற்றின் உற்பத்தி முறை ஆண்டு இலக்கீடு குறித்த சாதனை மற்றும் அவற்றின் பயன்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து வேளாண்மை மற்றும் விதைச்சான்று துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற ஆய்வகங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ), கோ.அசோகன், வேளாண்மை உதவி இயக்குநர், ஆ.தாகூர், விதை பரிசோதனை அலுவலர் ஆ.லீமா ரோஸ் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 02:35:37
Privacy-Data & cookie usage: