Perambalur: Collector invites employers to register!
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22.08.2026 அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் 15.08.2026-க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டல் மையத்தினை தொடர்பு கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 94990-55913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.