பெரம்பலூர்: முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, கலெக்டர் அழைப்பு!

schedule
2026-08-10 | 16:10h
update
2026-08-10 | 16:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector invites participation in the Chief Minister’s Trophy 2026 sports competitions!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளோர் tncmtrophy.sdat.in என்ற இணைய தளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்ய கடைசி நாள் 31.08.2026 ஆகும்.

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர் கம்பம், ஸ்பீடுஸ் கேட்டிங், நீர் விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படஉள்ளது.

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாகரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள tncmtrophy.sdat.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703516 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.08.2026 - 16:12:12
Privacy-Data & cookie usage: