Perambalur Collector Karpagam issued education loan orders worth Rs.1 crore!

பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விகடன் முகாம் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமில், கல்விக் கடன் வேண்டி 45 மனுக்கள் வந்தன.

மாணவ மாணிவகளின் உயர்கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கடன் முகாம்களை தொடர்ந்து நடத்திட அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல கட்டங்களாக கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 888 மாணவ மாணவிகளுக்கு ரூ.32 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

29 மாணவர்களுக்கு ரூ.98.88 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான ஆணைகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார். இந்நிகழ்வில், வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!