பெரம்பலூர்: 2.12 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-10 | 14:54h
update
2026-02-10 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector launches deworming campaign for 2.12 lakh people!

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் ந.மிருணாளினி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்தார்.

Advertisement

1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் குடல் புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது.

1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும், வீடுவீடாகச் சென்று குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் குடற்புழுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றது. தேசிய குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45,034 பெண்கள் பயன்பெறுவார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு 17.02.2026 அன்று 2ம் கட்ட முகாம் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். கலெக்டர் தலைமையில் குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது .

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அட்மா சேர்மனுமாக வீ.ஜெகதீசன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .சுவாமி முத்தழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 03:58:05
Privacy-Data & cookie usage: