பெரம்பலூர் : காரீப் பருவத்திற்கு, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-07-23 | 16:49h
update
2024-07-23 | 16:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector notice for farmers to get crop insurance for Kharif season

காரீப் பருவத்தில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பயிருக்கு வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளும் மற்றும் வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதிக்குள்ளும் பயிர் காப்பீடு செய்துக்கொள்ளலாம். எனவே அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டு தொகையை பெற்று பயன்பெறலாம்.

Advertisement

சின்ன வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,060/-, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.884/-, வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,460/-, மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,225/-, மஞ்சள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,601/- பிரிமியம் தொகை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சின்ன வெங்காய பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர், குரும்பலூர், பசும்பலூர், வாலிகண்டாபுரம், வெங்கலம் மற்றும் கீழப்புலியூர் குறு வட்டாரத்தில் அடங்கியுள்ள கிராமங்களிலும், தக்காளி பயிருக்கு கூத்தூர் குறுவட்ட கிராமங்களிலும்,

வாழை பயிருக்கு பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வெங்கலம் குறுவட்டார கிராமங்களிலும், மரவள்ளி பயிருக்கு கூத்தூர், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் கீழப்புலியூர் குறுவட்டார கிராமங்களிலும், மஞ்சள் பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பெரம்பலூர், குரும்பலூர், பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் மற்றும் கீழப்புலியூர் குறுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்வதற்கு உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சசாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 04:29:49
Privacy-Data & cookie usage: