உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்பிக்க, பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-07-06 | 14:17h
update
2022-07-06 | 14:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector notification to submit proof of lifetime for disabled persons receiving scholarship!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்ட (75 சதவீதத்திற்கு மேல்) மாற்றுத்திறனாளிகள், தண்டுவடம் பாதிக்கப்பட்டோர்- பார்கின்சன் நோய் மற்றும் நாள்பட்ட நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளானோர் என 5 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 பெறும் மாற்றுத்திறனாளிகள் உயிருடன் உள்ளார் என அறிய ஏதுவாகவும், தொடர்ச்சியாக உதவித்தொகை பெறவும் கிராம நிர்வாக அலுவலர் சான்றொப்பத்துடன் வாழ்நாள் சான்று சமர்பிக்க வேண்டும்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 20.07.2022 ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றினை சமர்பிக்குமாறு வேண்டும், மேலும் விவரங்களுக்கு 04328 – 225 474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 11:19:33
Privacy-Data & cookie usage: