பெரம்பலூர்: நகர்ப் புறத்தில் வீட்டு மனை பட்டா வழங்க, பயனாளிகளின் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு!

schedule
2025-05-06 | 09:37h
update
2025-05-06 | 09:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector personally inspects the homes of beneficiaries to provide housing land titles in urban areas!

தமிழ்நாடு முதலமைச்சர், நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்கிட அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், வடக்குமாதவி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 11 நபர்களும், எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள 83 நபர்களும், இந்திரா நகர் பகுதியில் 36 நபர்களும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.

Advertisement

குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு செய்து, கூரை வீடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் அட்டை வீடுகளில் வசித்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்கப் பெற்றதற்கு பின்னர், ஊராட்சியின் மூலமாக கலைஞரின் கனவு இல்லம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடக்குமாதவி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரில் கல் உடைக்கும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களிடம் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து, குழந்தைகளை கட்டாயமாக படிக்க வைத்திட வேண்டும், படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆய்வின்போது வருவாய் , ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 00:47:44
Privacy-Data & cookie usage: