பெரம்பலூர்: சத்திரமனை கிராமத்தில் ரூ.1.95 கோடியிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் !

schedule
2024-10-09 | 15:46h
update
2024-10-09 | 15:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector provided welfare assistance worth Rs. 1.95 crore in Chatramanai village!

பெரம்பலூர் வட்டம் சத்திரமனை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், முன்னிலையில் நடந்தது. முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அரசுத்துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

Advertisement

வருவாய்துறையின் சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ.79,50,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 19 பயனாளிகளுக்கு ரூ.11,20,000 இயற்கை மரண உதவித்தொகையும், 30 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரூ.5.66 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான உதவித்தொகைக்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,079 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப் பெட்டிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,38,329 மதிப்பீட்டிலான வேளாண் உபகரணங்களையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.16,79,178 மதிப்பிலான வேளாண் கருவிகளையும்,

தோட்டக்கலைத் துறையின் சார்பில் 05 பயனாளிக்கு ரூ.1,99,237 மதிப்பில் தெளிப்பான்கள், நுண்ணீர் பாசன அமைப்புகள் மற்றும் வெங்காய சேமிப்புக் கொட்டகை அமைப்பதற்கான ஆணையினையும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு ரூ.38,50,000 மதிப்பீட்டிற்கான ஆணைகளையும், தாட்கோ சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.30,00,000 மதிப்பிலான கடனுதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.4,000 மதிப்பிலான உதவி உபகரணங்கள் என மொத்தம் 303 பயனாளிகளுக்கு ரூ.1.95கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.

 டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு, சப்-கலெக்டர் சு.கோகுல், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, வேளாண்மை இணை இயக்குநர் அ. கீதா, மற்றும் பெரம்பலூர் தாசில்தார் சரவணன், சத்திரமனை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 23:51:41
Privacy-Data & cookie usage: