Perambalur Collector provided welfare assistance worth Rs.5.80 crore.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரிமங்கலத்தில், கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது, வருவாய் துறை, உணவு பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத் துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, தையல் இயந்திரம், கடனுதவிகள், பயிர் கடன், மின்மோட்டார்கள், திருமண நிதியுதவி திட்டம், ஊட்டச்சத்து பெட்டகம் போன்ற 434 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.5,79,82,416/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் இன்று வழங்கினார்.
இதில் டி.ஆர்.ஓ அங்கையற்கண்ணி, திட்ட இயக்குநர்கள் லலிதா (ஊரக வளர்ச்சி), கருப்பசாமி (மகளிர் திட்டம்), ஆர்.டி. ஓ நிறைமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கணபதி, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார், ஆலத்தூர் யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, அருணகிரிமங்கலம் ஊராட்சித் தலைவர் மணிவேல் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.