பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ; ரூ.21.77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர்!

schedule
2024-11-25 | 14:51h
update
2024-11-25 | 14:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector provides welfare assistance worth Rs. 21.77 lakhs!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.2,100 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான கை கடிகாரம் மற்றும் ஊன்றுகோலையும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலராக பணிபுரிந்த எஸ்.சங்கர் ராணுவ நடவடிக்கையில் சர்வதேச எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீரமரணம் அடைந்ததற்காக அவரது மனைவிக்கு கருணை தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையினையும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு அமைப்பதற்காக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.87,500 மானிய உதவித்தொகையும் என மொத்தம் 04 பயனாளிகளுக்கு ரூ.21,77,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பொது மக்களிடமிருந்து 296 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 12:18:40
Privacy-Data & cookie usage: