டிச.15க்குள் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2020-12-01 | 03:38h
update
2020-12-01 | 03:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector Srivendapriya informed to make corrections in the draft voter list by Dec. 15

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிhpயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2021 ஜன 1 தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் வரும் 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் பெயர் சேர்த்தலுக்கு படிவம் -6-யும், நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-யும், ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-யும், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8ஏ-யும், வெளிநாடு வாழ் இந்தியார்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6ஏ-யும் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

இதுதொடா;பாக, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் டிச.12.மற்றும் 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் அதனை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் மேற்சொன்ன படிவங்களில் பெறப்பட்ட விவரங்கள் https://perambalur.nic.in என்ற பெரம்பலூர் மாவட்ட அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில், வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தத்தில் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 11:19:35
Privacy-Data & cookie usage: