அனைத்து கட்சியினர் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

schedule
2020-02-14 | 16:08h
update
2020-07-26 | 05:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector V. Santha released the final voter list in the presence of all parties.

இன்று இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட கலெக்டர் வே. சாந்தா இன்று காலை, மாவட்ட கலெக்டர் வே.சாந்தா கூட்டரங்கில் வெளியிட்டார். பின்னர் தெரிவித்தாவது,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த டிச. 23. 2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,87,389 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2.60,732 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,48,121 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் 23.12.2019 முதல் 22.01.2020 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின் பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 12,827 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5981 ஆண் வாக்காளர்களும், 6837 பெண் வாக்காளர்களும், மற்றும் இதர 9 வாக்காளர்களும் உள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக 258 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 41 ஆண் வாக்காளர்களும், 54 பெண் வாக்காளர்களும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 81 ஆண் வாக்காளர்களும் மற்றும் 82 பெண் வாக்காளர;களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி மையங்களில் மொத்தம் 2,94,466 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,43,818 வாக்காளர்களும், பெண்கள் 1,50,625 வாக்காளர்களும் மற்றும் இதர 23 வாக்காளர்களும் உள்ளனர். 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,66,224 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,32,115 வாக்காளர்களும், பெண்கள் 1,34,095 வாக்காளர்களும் மற்றும் இதர 14 வாக்காளர்களும் உள்ளனர். பெரம்பலூர் வட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,60,690 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,75,933 வாக்காளர்களும், பெண்கள் 2,84,720 வாக்காளர்களும் மற்றும் இதர 37 வாக்காளர்களும் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொ) சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 00:35:05
Privacy-Data & cookie usage: