ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2020-11-27 | 14:07h
update
2020-11-27 | 14:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector wants to raise girls as well as boys!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கையேட்டினை வெளியிட்ட கலெக்டர் வெங்கடபிரியா பேசியதாவது:

மத்திய,மாநில அரசின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் 2018-19ஆம் ஆண்டிலிருந்து நமது மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரத்தினை உயர்த்துதல், பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்து ஊக்கப்படுத்தி தன்னிறைவு அடைய வழிவகை செய்து அவர்களது வாழ்வின் இலட்சியத்தினை நோக்கி முன்னேற செய்தல் போன்ற வழிகாட்டு முறைகளுடன் அனைத்துத் துறைகளின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறுது.

Advertisement

பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில்லை. ஆனால் ஒரு பெண் கல்வி கற்பதினால் தமக்கு மட்டும் அல்லாமல் தன்னையும், தன்னை சார்ந்தவர;களுக்கும் ஒளி விளக்காய் திகழ்ந்து வாழ்வில் சிறந்து விளங்கி சமுதாய முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறாள்.

பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் பொருட்டு தங்களது சமூக பொறுப்பினை விரைந்து முடித்திட வேண்டும் என்ற எண்ணத்தினால் விழிப்புணர்வின்றி திருமணம் செய்து வைக்கின்றனா;. இதனால் பெண் குழந்தைகளின் மனநலம், உடல்நலம் பெண்களின் மன தைரியம், முன்னேற்றம், இலட்சியம் பாதிக்கப்படுவதோடு எதிர்கால வலிமையான சமுதாயம் உருவாவதும் தடைபடுகிறது.

பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தருவதோடு பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையற்ற, பாதுகாப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்திடலாம்.

பெண்கள் சுய சார்புடன் பிறர் துணையின்றி சமூக அந்தஸ்துடன் வாழ கல்வி அறிவு இன்றியமையாதது ஆகும். அத்தகைய கல்வியினை தங்களது குழந்தைகளுக்கு அளித்து தைரியத்துடனும், சுதந்திரத்துடனும் சமூகத்தினை எதிர்கொள்ளவும் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.

பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், கல்வி கற்க செய்திடவும் அரசு பல்வேறு கடும் சட்டங்களை இயற்றி நடைமுறைபடுத்தி வந்தாலும், பொதுமக்களிடையே ஒத்துழைப்பு மற்றும் விழ்ப்புணர்வு இருந்தால் மட்டுமே பெண் குழந்தைகளின் வாழ்வு சிறப்படையும். பெண்களின் வளர்ச்சிக்கு அனைத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளரச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜி.கே லோகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிசா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிததாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:13:54
Privacy-Data & cookie usage: