பெரம்பலூர்: 100 நாள் வேலை பணியாளர்களுக்கு, 6 மாதம சம்பள பாக்கி வழங்க கோரி கலெக்டரிம் மனு!

schedule
2025-04-21 | 16:06h
update
2025-04-21 | 16:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector’s petition seeking to provide 6 months of salary for 100 -day workers

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதை உடனே வழங்க கோரியும், தொடர்ந்து அத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கலெக்டரிடம் அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.

Advertisement

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரில் சந்தித்து தங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், தங்களின் வாழ்வாதாரமான இந்த வேலை திட்டத்தினை எளம்பலூர் ஊராட்சியில் நிறுத்தக்கூடாது, இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மேலும் கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 08:38:38
Privacy-Data & cookie usage: