பெரம்பலூர்: ஆம்னி பஸ்

லாரி மோதி விபத்து: 2 பேர் பலி; பெண் ஒருவர் உட்பட 6 பேர் படுகாயம்!

schedule
2026-09-03 | 07:25h
update
2026-09-03 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collision between omni bus and lorry – 2 dead; 6 injured, including a woman!

வே பிரிட்ஜ்-க்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் பிளாட் பார்மை (மேடை) ஏற்றிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி பெரம்பலூர் அருகே 3 ரோடு மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்னே சென்ற லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

அதிகாலை 5.30 மணியளவில் வேளையில் எவரும் எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த இந்த சாலை விபத்தில், ஆம்னி பஸ்ஸில் பயணித்த திருப்பத்தூர் அருகே உள்ள சிங்கணபுரி எஸ் எஸ் நகரைச் சேர்ந்த பொன்னப்பன் மகன் பொன்.பால்துரை(52), என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் மணலி ராஜா தோட்டத்தை சேர்ந்த கொளந்தான் மகன் திருநாவுக்கரசு(32), என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பேருந்தின் இடதுபுறம் முற்றிலும் பலத்த சேதமடைந்தது.

மேலும் ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் எழுவராயன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் சரவணன்(44), மதுரை திருப்பரங்குன்றம் பெரிய கடை வீதியை சேர்ந்த கனகராஜ் மகன் அபிஷேக்(18), கன்னியாகுமரி மாவட்டம், தேரூர், வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் அர்ஜுன்(31), சென்னை சவுகார்பேட்டை திருப்புலி தெருவை சேர்ந்த குனவந்த் போக்ரா மகன் அஸ்வித்(31), மதுரை மேலூர் சூரப்பட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அப்துல் ரகுமான்(21), மதுரை சாவடி அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் மனைவி வெண்ணிலா உட்பட 6 பேர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சாலை விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகளுக்கு பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 07:29:53
Privacy-Data & cookie usage: