பெரம்பலூர்: வேலைவாய்ப்புப் பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணிகள் தொடக்கம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-05-15 | 17:23h
update
2026-05-15 | 17:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Commencement of services for employment registration, renewal, and the disbursement of unemployment assistance to jobless youth; Collector announces.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்து கொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோகொடுத்து ஏமாறவேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரிடையாகவோ அல்லது 04328-296352 மற்றும் 9499055913 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 18:35:47
Privacy-Data & cookie usage: