பெரம்பலூர்: டெல்லி போலீசாரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-05-28 | 03:57h
update
2026-05-28 | 03:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Communist Party members stage protest condemning Delhi Police!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனைகளை கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் பிருந்தா கராத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அசோக் தாவலே, மரியம் தாவலே, விஜு கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் விக்ரம் சிங, பி. வெங்கட், கிருஷ்ண பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்களையும், கட்சித் தோழர்களையும் அமித் ஷாவின் கீழுள்ள டெல்லி காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தி கைது செய்தது.

Advertisement

டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எட்வின், கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.05.2026 - 04:01:28
Privacy-Data & cookie usage: