Perambalur: Community feast held at Siruvachur Madura Kaliamman Temple; Collector participated!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் கலெக்டர் ஷரண்யா பொதுமக்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிந்து, செயல் அலுவலர் அசானாம்பிகை, கோயில் ஊழியர்கள் செல்வம், கோவிந்தராஜ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். சென்னை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உடன் ஸ்ரீஞானமதுரா கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தினர் இணைந்து சமபந்தி விருந்திற்கான உணவு ஏற்பாடு செய்து பரிமாறினர்.