பெரம்பலூர்: த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்! மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அழைப்பு!

schedule
2026-08-02 | 11:59h
update
2026-08-02 | 11:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Condemnation protest in Thanjavur against the TVK government! Call by District DMK In-charge V. Jagadeesan!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. வழிகாட்டுதல்படி, விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாட்டு அணை கட்டுவதை தடுக்க தவறியதை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டியும், பயிர்க் கடன் தள்ளுபடி மோசடியை கண்டித்தும், மேகதாட்டு பிரச்னையை கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜீன்-12, அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதல்வரை சந்திக்க போவதாக அதிகாரமற்ற தகவல்களை உலவ விட்டு ஆழம் பார்ப்பது என தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் விளம்பர மாடல் த.வெ.க.அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தஞ்சை பனகல் கட்டிடம் அருகில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன நடைபெறுகிறது.

Advertisement

இதில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்புறையாற்றுகிறார். மனித நேய மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ம.ஜ.க மாநில தலைவர் மு.தமீமுன்அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக், தி.க. மாநில பொதுச் செயலாளர் ரா.ஜெயக்குமார் மற்றும் தே.மு.தி.க., மக்கள் தமிழக நீதி மையம் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை, வார்டு கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.08.2026 - 12:17:58
Privacy-Data & cookie usage: