பெரம்பலூர்: தொகுதி மறுவரையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்!

schedule
2026-08-12 | 15:13h
update
2026-08-12 | 15:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Congress party members raise awareness about issues arising from constituency delimitation by putting up posters.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு தனக்கு சாதகமாக இருக்கும் வகையில் அவசரமாக தொகுதி மறுவறையை கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மத்திய அரசின் நிதி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை கண்டித்தும், சமமான பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதில் தொகுதி மறுவறையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையினால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், நிதியிழப்பு என்ன என்பதை குறித்து விளக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Advertisement

மேலும் இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, வட்டார தலைவர்களிடம் போஸ்டர்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகரில் ஆக.11 அன்று டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், உடலில் தீக்காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் கட்சியினர் அவர்களுக்கு பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இதில், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் முகமது இப்ராகிம் , நகர செயலாளர் காஜா செரிப், பெரம்பலூர் வட்டார தலைவர் சுந்தர்ராஜ், வேப்பந்தட்டை வட்டார தலைவர் சையத் பத்தோதின், வேப்பூர வட்டாரத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், ஆர்.ஜி.பி.ஆர்.எஸ் மாநில பொது செயலாளர் ராமசந்திரன், செந்துறை வட்டாரத் தலைவர் காமராஜ் , நகர பொருளாளர் கலைஞர் தாசன், மாவட்ட செயலாளர் சிவசங்கர், சுப்ரமணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 15:31:54
Privacy-Data & cookie usage: