பெரம்பலூர்: தவெக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

schedule
2026-05-08 | 12:37h
update
2026-05-08 | 12:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Congress party members stage a protest condemning the Governor for failing to invite the TVK-Congress alliance to form the government.

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026. சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவித்த நிலையில் 113 இடங்கள் பெரும்பான்மை இருந்தும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத பொறுப்பு கவர்னரை கண்டித்தும் இதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ் சி பிரிவு மாநில துணைத்தலைவர் அன்பின் சி மகேஷ். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார, நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2026 - 13:09:29
Privacy-Data & cookie usage: