பெரம்பலூர்: தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலெட்சுமி வேட்பு மனுத் தாக்கல்!

schedule
2026-04-04 | 14:51h
update
2026-04-04 | 14:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Constituency DMK Candidate Dr. Jayalakshmi Files Nomination!

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ-வுமான அனிதா-விடம் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி வேட்பு மனுவை இன்று கட்சியினருடன் வந்து தாக்கல் செய்தார். அப்போது, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் வக்கீல் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர் ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரிங் ரோடு, சின்னமுட்லு நீர்த்தேக்கம், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிநவீன உபகரணங்கள் மற்றும் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 மேம்பாலங்கள் கொண்டு வர பாடுபடுவேன் என்றும் 42- ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு இந்த தொகுதியை தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. இது பெண்கள் மத்தியில் ஆதரவாக உள்ளது எனவும் கூறினார். அப்போது மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 05:48:49
Privacy-Data & cookie usage: