Perambalur constituency: DMK’s victory is assured if even 60 percent of the members in the new SIR cast their votes; Constituency in-charge Thanga. Siddharthan spoke at the DMK executive committee meeting!
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்,
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, ”தமிழ்நாடு வெல்லும்” எனும் தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது, பிப்ரவரி-01 முதல் மகளிர் அணி சார்பில் “வெல்லும் தமிழ்நாடு” பிரச்சாரத்தை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பாக நடத்துவது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள BLA2, BDA முகவர்களுக்கான பட்டியலை உடனடியாக வழங்குமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொள்வது எனவும், கடந்த 26-ஆம் தேதி வெல்லும் பெண்கள் டெல்டா மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வரும் மார்ச் – 8, திருச்சியில் நடைபெறும் மண்டல மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பேசிய பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன் பேசியதாவது; பெரம்பலூர் தொகுதியில் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்த SIR பதிவேற்றம் திருத்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது, பெரம்பலூர் தொகுதியில் சுமார் 280.566 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 136,304 ஆண் வாக்காளர்களும், 144235 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலித்தனவர்கள் உள்ளனர். சுமார் 29 ஆயிரத்து 376 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் திமுக பட்டியலில் சுமார் 2ஆயிரத்து 500 பேர் மட்டுமே சேர்க்க முடியாமல் போய்விட்டது. இது தமிழகத்திலேயே மற்ற தொகுதிகளை காட்டிலும் பெரம்பலூர் தொகுதிதான் அதிகப்பட்சமான வாக்காளர்களை திமுகவின் BLA2, BDA மற்றும் கட்சியினர் விடுபடாமல் சேர்த்துள்ளனர். திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் 60 சதவீதம் அளவிற்கு பெரம்பலூர் தொகுதியில் திமுக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதாவது சுமார் 2 லட்சத்து 82 ஆயிரம் பேரில், சுமார் 1லட்சத்து 70 ஆயிரம பேரை திமுக உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை கட்சியினர் வாக்களிக்க செய்தாலே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். மேலும், திமுகவிற்கு பலகீனமாக உள்ள வாக்குசாவடிகளை கண்டறிந்து வாக்குகளை அதிகப்படுத்தி பலப்படுத்தினால் திமுகவின் சின்னம் உதயசூரியன் வெற்றி பெறும் எனவும், திமுகவிற்கு பெரம்பலூர் தொகுதியில் அதிக அளவிலான பெண்களே வாக்களித்துள்ளனர், வாக்களிப்பார்கள், அவர்களிடம் கட்சியினர் வாக்குகளை பெற இப்போதிருந்தே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என பேசினார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை,
டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர்,லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.காட்டுராசா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம்,
மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காடூர்.கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.இரமேஷ்,
மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.