பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

schedule
2019-05-21 | 05:51h
update
2019-05-21 | 05:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Perambalur Construction Engineers Association is the new executive incharhge ceremony.


பெரம்பலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் புதிய பதவி ஏற்பு விழா, நேற்று, அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் முரளிகுமார் தலைமைவகித்தார்.
உடனடி முன்னாள் பெரம்பலூர் சங்கத் தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். உடனடி முன்னாள் மாநிலத் தலைவர் சையது ஜாகீர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ஹெச்.ஷேக்தாவூத் கலந்து கொண்டார்.
Advertisement

பொறியாளர்கள் ராகவன், புருசோத்தமன், மார்ட்டின், கர்ணன், பெரியசாமி, கலைநாதன், சிவக்குமார், தம்பிராஜ், மோகன்ராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாக தலைவராக பாலமுருகன், துணைத்தலைவராக பொன்.விஜயபாபு, செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக கார்த்திக்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலராக ராமன் ஆகியோரும், செயற்குழு உறுப்பபினர்களாக சீனிவாசன், கார்த்திகேயன், தினேஷ்குமார், அப்துல்ஜலீல், செல்வம், சிவக்குமார், செல்வக்குமார், ராஜசேகரன், கிரிபிரசாத் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இதில் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

சங்கத்தின் சார்பில் விழாவில் பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்கும் வகையில் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற வீராங்கணை பிலிமிசை கிராமத்தை சேர்ந்த இலக்கியா உள்ளிட்ட பலரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:24:40
Privacy-Data & cookie usage: