பெரம்பலூர்: கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ கட்டணத்தை வழங்காத இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ரூ 3,44,460/ அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

schedule
2026-03-02 | 15:49h
update
2026-03-02 | 15:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Consumer Court orders fine of Rs 3,44,460 for insurance company that did not pay medical bills for corona treatment!

சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம் ரூ. 300 பிடித்தம் செய்து காப்பீட்டு தொகை பெற்று வருகிறது. இதேபோல கோனேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் கே.கே. குமார் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது சம்பளத்தில் தமிழ்நாடு நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம் 2012ன் படி மாதம் மாதம் ரூபாய் 300 பிடித்தம் செய்யப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மனுதாரருக்கும், இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அங்கு பெட் வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 12 5 2021 முதல் 17.5.2021 வரை பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு மொத்தம் செலவான தொகை 7 லட்சம் மருத்துவமனையில் செலவான தொகையை காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவு தொகை பெற மாவட்ட சுகாதார அலுவலரிடம் அனைத்து அசல் மருத்துவ ஆவணத்தையும் இணைத்து கடந்த 14 12 20021 ஆம் தேதி மாவட்ட சுகாதாரத்துறை கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்டு ரூ3,44,460/ ஒப்புதல் பெறப்பட்டு மேற்கண்ட யுனைடெட் இந்தியா சென்னை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனைத்து ஆவணங்களையும் அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

ஆனால், காப்பீட்டு நிறுவனத்திலிருந்து மருத்துவ கட்டணத்தை மனுதாரருக்கு கொடுக்காமல் பல காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தாகவும், இதனால் மனுதாரரும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடமும், சென்னை யுனைடெட் இன்சூரன்ஸ் நிர்வாகத்திடமும், பலமுறை நேரில் அணுகி விவரம் கேட்கும் போதெல்லாம் இன்று நாளை என காரணம் சொல்லி வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர் பெரம்பலூரில் உள்ள வழக்கறிஞர்கள் ஆர்.பாண்டியன் என்பவரிடம் அணுகி கடந்த அக்டோபர் மாதம் 2025 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணை செய்யப்பட்டு இன்று தீர்ப்பு பகிரப்பட்டது. அதில் மனுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ3,44,460/= ரூபாயும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 30 ஆயிரம் வழக்கு செலவிற்கும், ரூ10,000 தீர்ப்பு நகல் கிடைக்கப்பெற்ற 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:54:55
Privacy-Data & cookie usage: