பெரம்பலூர்: 30க்கும் மேற்பட்ட விவசாய வயல்களில் மின்மோட்டாருக்கு செல்லும் காப்பர் வயர்கள்; 3 பைக்குகள் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை!

schedule
2026-05-12 | 08:59h
update
2026-05-12 | 08:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Copper Wires Leading to Electric Motors Stolen from Over 30 Agricultural Fields; 3 Two-Wheelers Also Pilfered—Mysterious Intruders Suspected!

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் உள்ள மணியார் ரமேஷ், கணபதி பிரவீன், தேவதாஸ், சக்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வயல்களில் மின்சார பெட்டியில் இருந்து மின்மோட்டாருக்கு செல்லும் காப்பர் கம்பியுள்ள வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று, அதனை பூலாம்பாடி கிழக்கு ஏரிக்கரையில் தீவைத்து கொளுத்தி காப்பர் கம்பிகளை மட்டும் நள்ளிரவில் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை வயல்களுக்கு சென்ற விவசாயிகள் இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள அரும்பாவூர் வழக்குப் பதிவு செய்ததுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல அக்கிராமத்தில் நேற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்பகுதியின் அருகே பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக புகார் அளித்துள்ளனர். விவசாயிகளின் வயல்களில் காப்பர் கம்பி திருடு போன சம்பவம், பொதுமக்களின் பைக் களவு போன சம்பவமும் அப்பகுதி மக்களை தற்போது அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2026 - 09:10:06
Privacy-Data & cookie usage: