பெரம்பலூர்: ஆதிதிராவிடர்-பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்!

schedule
2025-08-27 | 09:34h
update
2025-08-27 | 09:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Cosmetology & Hair Dressing training for Adi Dravidian-Tribal youth; Collector’s information!

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார (Cosmetology & Hair Dressing ) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

Advertisement

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்த, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 45 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி சென்னையில் தங்கிபடிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் National Skill Development of India அங்கீகரிக்கப்பட்டதரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப காலமாத சம்பளமாக ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம்.

இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ நிறுவனம் மூலமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 23:47:55
Privacy-Data & cookie usage: