பெரம்பலூர்: லஞ்சம் வாங்கி சிக்கி, மருத்துவமனையில் இருந்து தப்பி தலைமறைவான தாசில்தாருக்கு பெயில்; கோர்ட் வழங்கியது!

schedule
2024-10-18 | 16:16h
update
2024-10-18 | 16:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Court grants bail to Tahsildar who absconded after taking bribe and absconding from hospital!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையில்லா சான்று வழங்குவதற்கு தங்களுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று, துணை தாசில்தார் பழனியப்பன் என்பவர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்சம் தர விரும்பாத தனியார் திருமண மண்டப மேலாளர் துரைராஜ் என்பவர் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியதை தொடர்ந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜுலை1ம் தேதி மாலை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த துரைராஜ், லஞ்ச பணத்தை கொடுக்க வந்திருப்பதாக துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் தெரிவித்த போது, அவர் அங்கிருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை வாங்கி வருமாறு தெரிவித்ததை அடுத்து நல்லுசாமி ரூ.20 ரொக்க பணத்தை துரைராஜிடமிருந்து வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துணை வட்டாட்சியர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் அடைத்தனர்.

அப்போது துணை வட்டாட்சியர் பழனியப்பன் நெஞ்சுவலிப்பதாக கூறியதை தொடர்ந்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்நிலையில் அடுத்த நாள் ஜுலை. 2ம் தேதி காலை துணை வட்டாட்சியர் பழனியப்பன் அரசு மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், துணை தாசில்தார் சஸ்பெணட் செய்யப்பட்டார். இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று நீதிமன்றம் துணை தாசில்தார் பழனியப்பனுக்கு பெயில் வழங்கியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 02:11:38
Privacy-Data & cookie usage: