மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

schedule
2022-06-22 | 18:02h
update
2022-06-22 | 19:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur court has sentenced a man to life imprisonment and fined him Rs 1,000 for killing his wife.

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள அத்தியூர் காலனியை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் ( வயது 61 ) பழைய பேப்பர் பாட்டில் சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலை (51) இவர்களுக்கு ராஜா என்ற மகனும், லெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Advertisement

ராஜா சென்னையில் வேலை பார்த்துவருகிறார். நடராஜன் தனது மனைவி, அஞ்சலையின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 287ம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் அருகில் இருந்து களை வெட்டி கழியால் மனைவியை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்து அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மங்களமேடு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி கைது செய்து வழக்கு பதிவு செய்தார். வழக்கு பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி நடராஜனுக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 23:41:38
Privacy-Data & cookie usage: