பெரம்பலூர்: கோர்ட் உத்தரவு; அடக்கம் செய்யப்பட்ட சடலம், 8 மாதங்களுக்கு பின்பு தோண்டி மீண்டும் வேறு இடத்தில் அதிகாரிகள் புதைத்தனர்!

schedule
2025-11-17 | 16:49h
update
2025-11-17 | 16:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Court order; Authorities dig up buried body 8 months later and re-bury it in another location!

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பிரபு (43). இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது அந்த நிலத்தின் அருகே இருந்த ஓடைப்பகுதியிலும் அரசு புறம்போக்கு நிலமும் இருந்துள்ளது. இதில், அதே ஊரைச் சேர்ந்த சில கிறித்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வந்துள்ளனர். இதனால், பிரபு உயர்நீதிமன்றத்தில் பிரம்மதேசம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என கடந்த 2023 ஆம் ஆண்டு மனு செய்திருந்தார். மனுவின் மீது விசாரணை செய்த நீதிமன்றம் அங்கு யாரும் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் 2025-ம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அதே ஊரில் வசித்து வரும் ஜெபஸ்டின் என்பவர் மனைவி மரிய செல்வம் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை, அரசு புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக பிரபு மீண்டும் உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற ஆணை இருந்தும் மீண்டும் அதே இடத்தில் சடலத்தை அடக்கம் செய்து வருவதாக, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் அங்கு அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யவும், மேலும், மேல்நிலைப் புறம்போக்கு அரசு புறம்போக்கு நிலங்களில் அரசு மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் இன்று, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், ஆகியோர் முன்னிலையில், மங்கலமேடு போலீசார் அங்கு நேரில் சென்று அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி எடுத்து கிருமி நாசினி தெளித்தனர் பின்பு, அதனை கிராமத்தில் உள்ள பொது மயானத்தில் புதைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 12:44:55
Privacy-Data & cookie usage: