Perambalur: Court secures certificate and provides guidance for a student who had dropped out to resume his studies!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருநகரைச் சேர்ந்த அபுதாலிப் மகன் முகமது ஷஜீர் என்பவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மாணவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி
விட்டார்.
இந்நிலையில், மாணவரின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மற்றும் கல்லூரி சான்றிதழ் பெற முடியாமல் பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உதவி கோரி மனு அளித்தார். மனுவினை விசாரணை செய்த பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொறுப்பு) தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான முனைவர் எல்.எஸ் சத்தியமூர்த்தி உத்தரவின்படி கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிப்பு அனுப்பி வரவழைத்து, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலளாரும் / சார்பு-
நீதிபதியுமான ஏ. சரண்யா மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் எஸ். காமராசு ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, மாணவர் மேலும் படிப்பை தொடர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, நீதிபதி சத்தியமூர்த்தி மாணவர் கோரிய அனைத்து சான்றிதழ்களும் வழங்கினார்.