பெரம்பலூர்: MRF தொழிலாளர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிகிற வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு: மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

schedule
2026-07-22 | 16:44h
update
2026-07-22 | 16:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: CPI(M) pledges support until the MRF workers’ protest concludes successfully – State Secretary P. Shanmugam speaks!

பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் MRF டயர் கம்பனியில் ஊதிய உயர்வு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி செய்தியாளர்களுக்கு அப்போது பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆதரவோடுதான் இந்த அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆதரவு கொடுத்ததற்கான காரணத்தை ஏற்கனவே நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். மக்கள், தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பி வாக்களித்திருக்கிறார்கள். பாஜக எந்தக்காரணம் கொண்டும் தமிழகத்திலே கால் ஊன்றிவிடக் கூடாது, வேற எந்த மறைமுகமாகவோ நேர்முகமாகவோ அதனுடைய ஆட்சி வந்துவிடக் கூடாது.

ஆகவே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களை கொண்டிருக்கிற தவெக ஆட்சியமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு என்கிற முடிவை எடுத்து நாங்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். அந்த ஆதரவு என்பது தொடர்கிறது. ஆகவே, இந்த அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கமாக, ஏழை எளிய உழைப்பாளி மக்களுடைய அரசாங்கமாக இது செயல்பட வேண்டும். அவர்களுடைய நலனிலே எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ள மாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

அதுதான் இந்த அரசு நீடித்து செயல்படுவதற்கான நல்ல சூழலை உருவாக்குமே தவிர, இல்லை என்றால் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். ஆகவே தமிழ்நாடு அரசாங்கம் இவ்வளவு நாள் எத்தனை நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும், மூத்த அமைச்சர்களை அழைத்து… ஏனால் புதிய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு இதற்கு முன் தொழிற்சங்க அனுபவமோ, தொழிலாளர் இதர பிரச்சனைகளை தலையிட்டு தீர்வு கண்ட அனுபவமோ இல்லாத ஒரு புதிய… அங்கீகாரமாக வரக்கூடாது என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை.

Advertisement

யாரை வேண்டுமானாலும் அமைச்சராக வைத்துக் கொள்வதற்கு முதலமைச்சருக்கு முழு உரிமை இருக்கிறது. ஆகவே அதிலெல்லாம் நாங்கள் தலையிடவில்லை…”

“தொழிலாளர்களின் பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும் என்றுதான் தொழிற்சங்கம் தரப்பிலிருந்து எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் மிக பிடிவாதமான போக்கை கடைபிடித்து, இந்த வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பதற்கான முழுமையான காரணம் தொழிற்சாலை நிர்வாகத்தின் பிடிவாதம் தான். ஆனால், இதிலே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு செயல்பட வேண்டிய தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை நிர்வாகத்தின் பக்கம் நின்று பேசுவது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு இந்த தொழிலாளர் நலன் சார்ந்த இந்த பிரச்சனையின் மீது சாதகமான முடிவை எடுக்க வேண்டும். தொழிற்சாலை நிர்வாகத்தை பணிய வைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இதிலே உரிய முறையில் தலையிடவில்லை என்பதுதான் தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மூத்த அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்பி, MRF நிர்வாகத்தோடு பேசி, தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் முன்வைக்கக்கூடிய ஞாயமான கோரிக்கைகளை பேசி தீர்வு காண்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய பேராதரவை தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு நேரடியாக தொழிலாளர்களை சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிகிற வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

செய்தியாளர் : “கடந்த ஆட்சியில் கூட திமுக எதிர்ப்பு இருந்த அளவுக்கு கூட, இப்போது தவெக அரசு [நடவடிக்கை] பண்ணலையோ அப்படின்ற மாதிரியான மக்கள் மனதில் ஒரு எதிர்ப்பு அலை எழுந்திருக்கு, இதை எப்படி பார்க்கிறீங்க?”

“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பதாக தெரிவித்து இருக்கிறார், ஏற்கனவே கடிதமும் எழுதியிருக்கிறார். அதுதான் தவெக கட்சியின் நிலைப்பாடு என்று சொன்னால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக இருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற இந்த ஞாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுகின்ற போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, காவல்துறையை ஏவி ஒடுக்குவது, அடக்குவது, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டி அடிப்பது போன்ற மோசமான நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை ஈடுபட்டு வருகிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பதில்: நேற்றைய தினம் சென்னை மாநகரில் பல்வேறு கல்லூரிகளுக்குள் புகுந்து உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை எல்லாம் கைது செய்வது போன்ற அத்துமீறிய நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆகவே காவல்துறையினுடைய இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதற்கும், ஜனநாயகப்படி போராடுவதற்கான அனுமதியையும் போராடுவதற்கான உரிமையை பறிக்கக்கூடிய வகையில் அரசினுடைய அணுகுமுறை என்பது இருக்கக்கூடாது.

போராட்டத்திற்கான இடங்களை ஒதுக்கி தந்து, இந்த போராட்டங்கள் ஜனநாயகப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெறுவதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் தமிழகத்திலே உருவாக்க வேண்டும் என்பதை நான் வேண்டுகோளாக தமிழ்நாடு அரசுக்கு வைக்க விரும்புகிறேன்.

மீறி அடக்குமுறையின் மூலமாக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று தமிழ்நாடு அரசாங்கம் நினைத்தால், அடக்குமுறையை தூள் தூளாக்கக்கூடிய நடவடிக்கையில் தமிழ்நாட்டினுடைய மாணவர்களும் இளைஞர்களும் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார். அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ், மாநில கட்டுப்பாட்ட உறுப்பினர் எஸ்.ஶ்ரீதர், மாநில செயற்குழு டி.ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமி. நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.07.2026 - 17:47:41
Privacy-Data & cookie usage: