பெரம்பலூர்: போலீஸ் எஸ்.பி ஆபீசில், பெற்றோர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகள் புகார் மனு!

schedule
2026-04-29 | 16:16h
update
2026-04-29 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Daughter files petition at SP’s office seeking action against those who assaulted her parents.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி செல்வராணி (30) என்பவர் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆபீசில் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: பசும்பலூர் கிராமத்தில் தனது பெற்றோர்கள் ராமசாமி – செல்லம்மாள் ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 23.04.2026ம் தேதி மாலை சுமார் 4.00 மணிக்கு வழக்கம் போல என் பெற்றோர்கள் வயல் காட்டிற்கு செல்லும் போது அதே ஊரை சேர்ந்த துரைசாமி மற்றும் அவரது மகன்கள் ரவி, ராஜா, மற்றும் ராஜ்குமார், தனசெல்வி, வளர்மதி, தமிழ்ச்செல்வி ஆகியோர்கள் இரும்புகம்பி, உருட்டுகட்டையை கொண்டு தாக்கி அவமானப்படுத்தியும், தனது அப்பாவை கொலை வெறியுடன் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த இரத்தகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், என் அம்மாவிற்கு இடுப்பில் எலும்புமுறிவு ஏற்ப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயளியாக இன்று வரை இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும், பெற்றோர்களை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வி.களத்தூர் போலீசில் புகார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு எதிரிகளை கைது செய்யாமல் வெளியில் இருந்துக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்க சொல்லி எதிரிகள் மிரட்டி வந்ததாகவும், புகார் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக விட்டதால், 23.04.2026ம் துரைசாமி குடும்பத்தினர் தனது பெற்றோரை தாக்கியதாகவும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 16:18:36
Privacy-Data & cookie usage: