பெரம்பலூர்: டீக்கடை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு ; தொடரும் சோகம்!

schedule
2026-08-15 | 19:21h
update
2026-08-15 | 19:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Death toll in tea shop Fir accident rises to 3; tragedy continues!

Aug 11 / 2026

Advertisement

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அருணாசலம் என்பவர் நடத்தி வந்த டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று சிலிண்டர் விடுத்து விபத்துக்குள்ளானது. அதை டீக்கடையில் வேலை செய்தவர்கள் சாலையில் நடந்தவர்கள் என பதினாறு பேர் தீக்காயம் அடைந்தனர்.

இதில் நேற்று பொம்மனப்பாடியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இன்று காலை திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தக் கடையின் டீ மாஸ்டர் சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரும் உயிர் இழந்த நிலையில், இன்று மாலை பெரம்பலூர் ரங்கா நகரை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் சகாதேவன் (54) என்பவரும் உயிர் இழந்தார். கொத்தனார் வேலை பார்த்து வரும் சகாதேவன் கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அவர் இந்த தீ விபத்தில் சிக்குவார் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

டீக்கடை விபத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் அடுத்தடுத்து இறக்கும் சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 19:50:53
Privacy-Data & cookie usage: