பெரம்பலூர் நகரில் காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் கடந்த ஆக.11 அன்று சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மணிகண்டன், டீ மாஸ்டர் தினேஷ் மற்றும் சகாதேவன் என்ற மூவரும் சிகிச்சையின் போது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த நிலையில்,திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த டீ சப்ளையர் கொட்டையை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) இன்று அதிகாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.இத்தீவிபத்தில் ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த உயிரிழப்பால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என 7 பேர் இன்னும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.