பெரம்பலூர்: டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

schedule
2026-08-19 | 04:23h
update
2026-08-19 | 04:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

 

Perambalur: Death toll rises to 5 in tea shop fire caused by gas cylinder explosion!

Aug 11 / 2026

Advertisement

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆக.11ம் தேதியன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர் அளவிற்கு ஏற்பட்ட தீ ஜுவாலையால் 16 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிகண்டன், டீ மாஸ்டர் தினேஷ் மற்றும் சகாதேவன், சப்ளையர் ஆறுமுகம் ஆகியோர் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இன்று அதிகாலை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி புவனேஸ்வரி (32) பெண் சப்ளையர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் டீக்கடை தீ விபத்தில் ஏற்பட்ட விபத்தில் வலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும், திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என 6 பேர் இன்னும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டர் வெடித்த விபத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகளாகி வரும் சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.08.2026 - 04:28:48
Privacy-Data & cookie usage: