பெரம்பலூர்: டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

schedule
2026-08-20 | 06:46h
update
2026-08-20 | 06:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Death toll rises to 6 in tea shop fire caused by gas cylinder explosion!

2026-Aug-11

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆக.11ம் தேதியன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர் அளவிற்கு ஏற்பட்ட தீப்பிழம்பு ஏற்பட்டது. அதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், டீ மாஸ்டர் தினேஷ் மற்றும் சகாதேவன், சப்ளையர் ஆறுமுகம், பெண் சப்ளையர் புவனேஸ்வரி ஆகியோர் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த களரம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் விஜயகுமார் இன்று காலை 9 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவருக்கு 47 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இவர் கடைக்கு டீ குடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனால் டீக்கடை தீ விபத்தில் ஏற்பட்ட விபத்தில் வலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என 5 பேர் இன்னும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டர் வெடித்த விபத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகளாகி வரும் சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.08.2026 - 06:48:55
Privacy-Data & cookie usage: