பெரம்பலூர்: டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு! இரங்கல் கூட தெரிவிக்காத முதலமைச்சர்! பொதுமக்கள் வேதனை!!

schedule
2026-08-21 | 18:36h
update
2026-08-21 | 18:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Death toll rises to 7 following a fire caused by a gas cylinder explosion at a tea shop! The Chief Minister has not even offered condolences! Public expresses anguish!

Aug 11 / 2026

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆக.11ம் தேதி அன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சிதறிய தீவிபத்தில் 10 மீட்டர் அளவிற்கு ஏற்பட்ட தீப்பிழம்பு ஏற்பட்டது. அதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், டீ மாஸ்டர் தினேஷ் மற்றும் சகாதேவன், சப்ளையர் ஆறுமுகம், பெண் சப்ளையர் புவனேஸ்வரி, களரம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய 6 பேர் ஏற்கனவே தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், இன்று இரவு 9 மணி அளவில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவக்குமார் (52). பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இவரும் கடைக்கு டீ குடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டீக்கடை தீ விபத்தில் ஏற்பட்ட விபத்தில் வலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும், திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என 4 பேர் இன்னும் அதிதீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டர் வெடித்த விபத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகளாகி வரும் சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

டீக்கடைகளில் டீக்குடிக்க அச்சமடைந்து வரும் வேளையில் சாலையோர சில்லிசிக்கன், வடை போண்டா, இட்லி, தோசை விற்கும் சிறு, குறு வணிகர்களுக்கு கேஸ் சிலிண்டரை பாதுபாப்பாக கையாள்வது குறித்த உரிய முறையான பயிற்சியை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ சிவக்குமார் ஆறுதல் கூறினார். ஆனால், இந்த தீவிபத்தில் 7 பேர் இறந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. மேலும், பல்வேறு விபத்துகளில் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 18:59:00
Privacy-Data & cookie usage: