பெரம்பலூர்: தொடர்ந்து வாகனங்களில் அடிபட்டு அழியும் மான் இனங்கள்; வேலியிட்டு காக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை!

schedule
2026-08-16 | 13:05h
update
2026-08-16 | 13:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Deer populations are being wiped out after repeatedly getting hit by vehicles; the public urges the Forest Department to protect them by erecting fences.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் மான் இனங்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இவை இரை மற்றும் குடிநீரை தேடி வனத்தை வெளியே வருகின்றன. வயல் வெளிகளில் செல்பவை தப்பித்து விடுகின்றன. தப்பி தவறி செல்லும் மான்கள் அடையாளம் வாகனங்களில் மோதி நாளுக்கு நாள் பலியாகி அழிந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல இன்று, நக்கசேலம் அருகே உள்ள வனப்பகுதியில் மாக்கள்

Advertisement

ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளி மான் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த மானிற்கு சுமார் 3 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஓராண்டிற்குள் மட்டும் பெரம்பலூர் மற்றும் சேலம், திருச்சி மாவட்ட எல்லைகளில் உள்ள வனப்பகுதியில் சுமார் 100 மான்கள் இறந்திருக்கும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மான் இனங்களை மற்ற வேட்டையாடும் மிருங்கள் உணவிற்காக அழிக்கும் முன்னரே மான்கள் அழிந்துவிடும். வனப்பகுதியையொட்டி இருக்கும் சாலையில் இரும்பு கம்பி வேலி அமைத்து, மான்களையும், அவற்றால் ஏற்படும் விபத்துகளில் இருந்து மனிதர்களையும் காக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 13:41:43
Privacy-Data & cookie usage: