பெரம்பலூர்: ஒன்றிய தி.மு.க.சார்பில்‌, வடக்கு மாதவி கிராமத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

schedule
2026-01-05 | 06:22h
update
2026-01-05 | 06:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Deputy Chief Minister Udhayanidhi Stalin’s birthday celebration organized by the Union unit of the DMK in North Madhavi village!

பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க. சார்பில்‌, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49- ஆவது பிறந்தநாள் விழா பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.இராஜ்குமார் தலைமையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய துணைச் செயலாளர் தேவகி நடராஜன், நா.ஆதித்யன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் இரா.கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் மு.இராமச்சந்திரன்,
கிளைச் செயலாளர்கள் பி.ஜெயராமன், சி.கலையரசன், மா.கார்த்திகேயன், ரா.சஞ்சீவ்குமார், பெ.திலகேஷ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் வா.இராஜ்குமார், சி.இரமேஷ், சு.பிரபு ஆகியோர் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் மற்றும் வெற்றி வாக்குச்சாவடி சிறப்புக்கூட்டம் வடக்கு மாதவி கிராமத்தில் நடைபெற்றது.

Advertisement

இதில், திமுக செய்தி தொடர்பாளர் க.நாகநந்தினி யுவராஜ், மாவட்டபொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தி.மு.க. அரசின் சாதனைகளையும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் விரிவாக எடுத்து கூறினார்கள். தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், மு.விஜயரத்தினம், எஸ்.ஆர்.டி. ராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாதவி கிளைச் செயலாளர் ரா.சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:08:10
Privacy-Data & cookie usage: