பெரம்பலூர்: வளர்ச்சி திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்; புதிய கலெக்டராக பொறுப்பேற்ற அப்துல் ராசிக் பேட்டி!

schedule
2026-09-11 | 08:04h
update
2026-09-11 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Development schemes will be implemented effectively; Abdul Rasik speaks after assuming office as the new Collector.

பெரம்பலூரின் 20வது கலெக்டராக பொறுப்பேற்ற அப்துல் ராசிக், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:

தமிழ்நாடு அரசின் உடைய ஆணைப்படி, இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பு ஏற்றிருக்கின்றேன். அரசினுடைய நலத்திட்டங்களை மக்களுடைய கொண்டு செல்வதற்கு மாவட்ட ஆட்சியராக அனைத்து நடவடிக்கைகளும் என்னால் எடுக்கப்படும்.

Advertisement

அதேபோன்று சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய பாதுகாப்பு, போதைப் பொருட்கள் ஒழிப்பு, இது போன்றவற்றிற்று முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவை எந்தெந்த மக்களுக்காக செயல்படுத்தப்படுகின்றதோ அவையெல்லாம் முறையாக சென்றடைவதை முறையாக கண்காணிக்கப்படும்.

மேலும், அரசின் முன்னுரிமை திட்டங்களான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் போன்ற திட்டங்களுடைய செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும்.

அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் மாவட்ட அளவில் செயல்படுத்துவதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தினுடைய பொதுமக்களும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.09.2026 - 08:24:16
Privacy-Data & cookie usage: