பெரம்பலூர் மாவட்டம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.77 % தேர்ச்சி: மாநிலத்தில் 8 வது இடம்! 60 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி!!

schedule
2024-05-10 | 09:36h
update
2024-05-10 | 09:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District: 94.77 % pass in 10th Class: 8th in the state! 60 schools 100 percent pass!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 94.77 % தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 8 வது இடத்தைப் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வை 141 உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 4,289 மாணவர்களும், 3,576 மாணவிகளும் என மொத்தம் 7,865 மாணவ, மாணவிகள் 42 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இதில் 3,985 மாணவர்களும் 3,469 மாணவிகளும் என மொத்தம் 7,454 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.77% ஆகும்.

Advertisement

இதில் மாணவர்கள் 92.91 % , மாணவிகள் 97.01% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 04.01 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், ஆதி திராவிட நலப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகள் மற்றும் சமூக நலப்பள்ளி என மொத்தம் உள்ள 141 பள்ளிகளில் 60 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.

இதில், ஆதி திராவிட நலப்பள்ளிகளான இலாடபுரம். களரம்பட்டி, பசும்பலூர், பாடாலூர், அரசு பள்ளிகளான நெற்குணம். வாலிகண்டபுரம், வெங்கலம், கல்பாடி, மேட்டுப்பாளையம், செங்குணம். தம்பிரான்பட்டி, அரசு மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளியான மலையாளப்பட்டி, கூத்தூர், இலப்பைக்குடிக்காடு, மருவத்தூர். மாதிரிப்பள்ளி கிழுமத்தூர். ஒதியம், ஜமீன் பேரையூர், காருகுடி, ஆதனூர், எழுமூர், கூடலூர், ஜமீன் ஆத்தூர், பீல்வாடி, புதுவேட்டக்குடி, கொட்டரை, அரசு உதவி பெறும் பள்ளிகளான தந்தை ரோவர் மற்றும் மௌலானா பள்ளி, சுயநிதி மெட்ரிக் 23 பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 7 ம் மற்றும் சமூக நலப்பள்ளி கௌதம புத்தர் ஆகிய பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:01:33
Privacy-Data & cookie usage: