பெரம்பலூர்: டீக்கடை சிலிண்டர் வெடித்த தீவிபத்தில் இறந்தவருக்கு ரூ.2.10 லட்சம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம்!

schedule
2026-08-16 | 08:47h
update
2026-08-16 | 08:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: District administration provides ₹2.10 lakh in relief to the family of the person who died in a fire caused by a tea shop cylinder explosion.

Advertisement

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே டீக்கடை ஒன்றில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 நபர்கள் தீக்காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த அக்கடையின் டீ மாஸ்டர் தினேஷ்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம் ரூ. 2,10,000/-க்கான ஆணையை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று தாசில்தார் சுகுணா வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 09:07:02
Privacy-Data & cookie usage: