பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் ஆர்.டி. இராமச்சந்திரன் தேர்வு!

schedule
2022-04-27 | 17:09h
update
2022-06-03 | 13:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur district AIADMK Secretary R.T. Ramachandran re-elected

File Copy

பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக ஆர்.டி. இராமச்சந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்களான தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்யா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களிடமிருந்து விருப்ப மனு பெற்றனர்.

Advertisement

இதில், மாவட்ட செயலாளர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. இராமச்சந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தால், அவர் போட்டியின்றி, மீண்டும் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 23:39:01
Privacy-Data & cookie usage: