Perambalur District Collector Office Grievance Meeting petitions

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்களின் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது வருகிறது. அதில் சிலர் பல முறை மன கொடுத்தும் எவ்வித எடுக்கப்பட வில்லை என வேதனையுடன் திரும்ப திரும்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

10 அடி ஆழ பள்ளத்தை மூட 10 முறை மனு:

பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பெருமாள் கொடுத்துள்ள மனு:

கடந்த 20 மாதங்களுக்கு மேலாக, அவரது வீட்டிற்கு முன்பாக 10 ஆழப் பள்ளம் பஞ்சாயத்து போர்டு சார்பில் தோண்டப்பட்டதாகவும், இது நாள் மூடவில்லை என்றும், அவருடைய வயதான அம்மா அதை கடந்து வர வெகுசிரமப் படுகிறார் என்றும் அதனை சரி செய்ய வேண்டும் இன்றும் 10 வது முறையாக மனு கொடுத்துள்ளார். வழக்கம் மனு பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.

வீட்டருகே வெடி கிணறு வெட்டுவதை தடுக்க கோரி மனு

பெரம்பலூர் நகராட்சி 7 வது வார்டு, திருச்செல்வன் நகர் தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் மனைவி ஜானகி கொடுத்துள்ள மனு :

ஜானகி வீட்டருகே சந்திரன் என்பவர் வெடி வைத்து கிணறு தோண்டி வருவதாகவும், அதனால் வீடுகள் விரிசல்கள் உண்டாகுவதுடன் கல், மண், பாறைத் துண்டுகள் வீட்டின் மீதும், வீட்டருகே விழுந்துவருவதாகவும், அதனை தடுக்க கோரியும் மனு கொடுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்சனை தீர்க்க கோரி மனு :

லாடபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி செயலர் மரியாதையின்றி நடந்து கொள்வதாகவும், தண்ணீர் வினியோகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளார்.


தொகுப்பு வீடு கட்டியதில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க கோரி மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சாந்தி கொடுத்துள்ள மனு:

ஐ.ஏ.ஒய் 15 – 16 திட்டத்தின்கீழ் தொகுப்பு வீடு கட்டப்பட்டதில் தனக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 50 ஆயிரத்தை வழங்க வேண்டும், இது குறித்து அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஞாயிறன்று மகளுக்கு திருமணம் வைத்துள்ளதால் பணத்தை வழங்க வேகமாக தீர்வு செய்யும்படி கோரியுள்ளார்.

கலெக்டர் கார் முன்பு காலிக்குடங்களுடன் வைத்து தர்ணா போராட்டம்

பெரம்பலூர் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போரட்டம் நடத்தினர். மாதத்திற்கு ஒரு முறைதான் ஊராட்சி சார்பாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலத்திற்கு வந்த பெண்கள் கலெக்டரின் காருக்கு முன்பாக காலிக்குடங்களுடன் அமர்ந்தும், காலிக்குடங்களை வைத்தும் தர்ணா போராட்டம் நடத்தினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இன்று நடந்த மாவட்ட ஆட்சியா அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 216 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்ட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!