பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில், லோக் அதாலத் : மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

schedule
2022-06-24 | 07:28h
update
2022-06-24 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District Courts, Lok Adalat: Notice of the District Legal Services Commission

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வரும் ஜுன் 26 அன்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி, முடித்துக்கொள்ள பொதுமக்களுக்கும், வழக்காடிகளுக்கும் அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Advertisement

இதில் பொதுமக்கள் – வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் (சமாதானமாக செய்யக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக தீர்வு பெற ஓர் அறிய வாய்ப்பாக அமைய உள்ளது.

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக வழக்குகளில் சமரசமாக செல்வதால், இரு தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்பு(AWARD)க்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் 26.06.2022-ம் தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பாக இதனை பயன்படுத்தி, பயனடையுமாறும்,

இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தனித்னியாக நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டு பெரம்பலூர், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பலனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 22:37:02
Privacy-Data & cookie usage: