பெரம்பலூர் மாவட்ட திமுக: என் வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி!!” ஆலோசனைக் கூட்டம்!!

schedule
2025-11-01 | 16:22h
update
2025-11-01 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur District DMK: My polling booth! Winning polling booth!!” Consultative meeting

“என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” எனும் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் முழக்கத்தின்படி, 2026- சட்டமன்ற தேர்தலில் “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” எனும் வெற்றிப்பயணத்தை தொடரும் வகையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் – மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா.எம்.பி. ஆகியோர் வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க,

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பெரம்பலூர்,குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
பாக நிலை முகவர்கள்(BLA2) பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் IT WING பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், ஜே.கே.மஹால் திருமண மண்டபத்தில், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்த கூட்டத்தில், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இது வெறும் தேர்தலுக்கான பணி அல்ல, ஒட்டு மொத்த இந்தியாவை ஒரு நாடாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நமது முதல்வரிடம்தான் வந்துள்ளது. அதனால் மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று பேசினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், செ.அண்ணாதுரை,
ஆர்.முருகேசன், ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்நி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எஸ்.ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன்,

மாவட்ட அணி அமைப்பாளர்கள் கவிஞர் .முத்தரசன், சு.தங்கராசு, ஆர்.வேணுகோபால், ஏ.கே.எம்.கரிகாலன், காடூர்.கவியரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், தங்க.கமல், வெ.கார்மேகம், எ.ஜாகிர்உசேன், ஆர்.குமார், எம்.சுந்தர்ராஜ், க.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், வேப்பூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.சிவா, கிளைக் கழக செயலாளர்கள், பாக நிலை முகவர்கள்(BLA2) பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் IT WING பூத் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:20:28
Privacy-Data & cookie usage: