Perambalur district DMK protest against imposition of Hindi! District Secretary Kunnam C. Rajendran report!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பன்முகத்தன்மைக்கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து ஒருமை தன்மையாக்க நினைக்கிறது‌ பா.ஜ.க. அரசு. அலுவல் மொழி சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தின் மூலமாகவும்,இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க.அரசிற்கு திமுக தலைவரும் – முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை கை விட வேண்டுமென்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முடிவினை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக தலைவர் ஆணையேற்று, கழக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவிப்பிற்கினங்க, தி.மு.க.இளைஞர் அணியும், தி.மு.க. மாணவர் அணியும் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், 15.10.2022 – சனிக்கிழமை, காலை 9.00 மணியளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைபெறுகிறது.

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர் , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆர். முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் – மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் – பெரம்பலூர் நகர கழகச்செயலாளர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், கழக இளைஞரணி, மாணவரணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!